வீடு, வீடாக சென்று கருவாட்டு வியாபாரம் செய்துவந்தார் மகாராஜா. இந்த நிலையில், இவர்களின் 3வது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சொந்தத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசிவந்துள்ளனர். இதுசம்பந்தமாக நேற்றிரவு தம்பதி பேசிக்கொண்டிருந்தபோது பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது குடிபோதையில் இருந்த மகாராஜா கடும் வாக்குவாதம் செய்து உள்ளதாக தெரிகிறது. அப்போது சவுந்தரவள்ளி, ‘’ எனது சொந்தத்தில்தான் மகளை கட்டிக் கொடுப்பேன்’ என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த மகாராஜா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து மனைவியை சரமாரியாக வெட்டியதில் தலை, கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதற்குள் சவுந்தரவள்ளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகாராஜா, கொலை செய்த கத்தியுடன் மணலி காவல்நிலையத்தில் சரணடைந்தது நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வந்து சவுந்தரவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே போதை இறங்கியதும் மகாராஜா கதறி அழுதுள்ளார். அப்போது அவர், ‘’ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டேன். நான் ஜெயிலுக்கு போய்விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள்’’ என்று போலீசாரிடம் தெரிவித்து அழுதுள்ளார். அப்போது போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதன்பின்னர் மகாராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post மகளுக்கு திருமணம் செய்வதில் பிரச்னை; மனைவியை வெட்டி கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் கணவர் சரண்: போதை தெளிந்ததும் கதறி, கதறி அழுதார் appeared first on Dinakaran.
