சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி தனது 19வது லீக் ஆட்டத்தில் இன்று களம் காணுகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணியை எதிர்கொள்கிறது. சென்னை இதுவரை விளையாடிய 18 லீக் ஆட்டங்களில் 5ல் மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது; தவிர, 6 டிரா, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வென்றால் நாக் அவுட் சுற்று வாய்ப்பு குறித்து சென்னை நினைத்துப் பார்க்க முடியும்.
கேரளா 18 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 6 ஆட்டங்களில் வென்று உள்ளது. எனினும் 9 ஆட்டங்களில் தோல்வி, 3 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது. கேரளா அணி, சென்னையை விட 3 புள்ளிகள் கூடுதலாக பெற்று புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் நவ.24ம் தேதி கொச்சியில் மோதிய லீக் ஆட்டத்தில் கேரளா 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி உள்ளது.
The post சென்னையில் இன்று ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவுடன் சென்னை மோதல் appeared first on Dinakaran.
