ஊத்துக்கோட்டை, திருத்தணியில் திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அறிமுகம் மற்றும் சமூக வலைதள பயிற்சி வழங்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சங்கர், மோகன்பாபு, முரளிதரன், யுவராஜ், கதிரவன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைச்செயலாளர் உமா மகேஸ்வரி, பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அப்துல் மாலிக், இளைஞரணி செய்தி தொடர்பாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், ஒன்றியச் செயலாளர்கள் சத்தியவேல், மணிபாலன், ஆனந்தகுமார், ஜான் பொன்னுசாமி, பேரூர் செயலாளர்கள் அபிராமி குமரவேல், ஆரணி முத்து, தமிழ் உதயன், மாவட்டத்தின் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், சம்பத், சுமன், ஜெயலலிதா, ராஜேஷ், வெற்றி, தினகரன், தில்லைகுமார், விமல்ராஜ், ஆத்துப்பாக்கம் வேலு, வடிவேலு, அசோக், கார்த்திக், லோகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் 2026 தேர்தலில் முனைப்புடன் செயல்பட வேண்டும், உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா நன்றி கூறினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருத்தணியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி கிரண் அனைவரையும் வரவேற்றார். இதில் திருத்தணி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன்,

திராவிட கழக துணை பொதுச் செயலாளர் மதவதனி, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சேலம் தருண் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைத்து ஆர்வத்துடன் செயல்பட்டு திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திருத்தணி நகரச் செயலாளர் வினோத்குமார், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், சீனிவாசன், சண்முகம், பழனி, கூளூர் எம்.ராஜேந்திரன், பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.பாபு, செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார், மோதிலால், டி.ஆர்.கே.பாபு, புவனேஷ்குமார், டி.ஆர்.திலீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை, திருத்தணியில் திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: