ஆத்தூர் அருகே இடம் அளவீடு செய்யும் பணிக்கு போலீஸ் குவிப்பு

 

நிலக்கோட்டை, ஜன. 26: ஆத்தூர் அருகே ஒரு கிராமத்தில் இருவேறு பிரிவை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினர் வழிபாட்டு தலம் முன்புள்ள இடத்தில் மற்றொரு பிரிவினர் சில நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு பிரிவினர் அந்த இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் அந்த தரப்பினர் அந்த இடம் வழிபாட்டு தலத்திற்கு சொந்தமானது, சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கிடையே நீதிமன்றம் உத்தரவின் பேரில் நேற்று ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் தலைமையில், சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. அப்போது இரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்ப்டடோர் அங்கு கூடினர். திண்டுக்கல் ஏடிஎஸ்பி தெய்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஆத்தூர் அருகே இடம் அளவீடு செய்யும் பணிக்கு போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: