வாமனன் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி முதல் அடியை அடிவானத்தில் இருந்து பூமிக்கும் இரண்டாவது அடியை பூமியிலிருந்து பாதாளத்திற்கும் மூன்றாவது அடியை எங்கு வைப்பது என மன்னனிடம் கேட்கவே மகாபலி தன் தலையை கொடுத்தார். தன் வாக்கை நிறைவேற்றவே மகாபலி தன் தலையை கொடுத்தார் என்கிறது பாகவத புராணம். இத்தலத்தின் வரலாறும் இதுவே. இதில், வாமன அவதாரத்திற்கு உலகம் என் ற பெயருக்கு செவ்வாயாகவும் வாமனனாக வந்ததால் சனியாகவும் பிராமண ரூபத்தில் வந்ததால் வியாழனாகவும் பின்பு விஸ்வரூபம் கொண்டதால் விஷ்ணுவை புதனாகவும் எடுத்துக் கொள்ளலாம்.இத்திருத்தலமானது, செவ்வாய், வியாழன், புதன் மற்றும் சனி கிரகங்களின் இணைவாக உள்ளது. யாருக்கேனும் செவ்வாய், சனி மற்றும் வியாழன், புதன் இணைவிருந்தால் அவர்கள் நிலம் வாங்கி தொழில் செய்யும் பொழுது அல்லது நிலத்தை விரிவுபடுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். நிலம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கும் நிலத்தை விரிவுபடுத்தும் பொழுது ஏற்படும் பிரச்னைகளுக்கும் வாய்ப்புள்ளது. விரிவாக்கம் செய்பவர்கள் பச்சை கலர் வஸ்திரம் கொடுத்து பாலில் செய்த இனிப்பை நெய்வேத்தியமாக படைத்து அங்குள்ளவர்களுக்கு தானம் செய்யவும். இதை ஆறு வாரம் செய்தால் நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும். குருவும் புதனும் உபய லக்னத்தில் தனித்திருந்தால் கேந்திரா ஆதிபத்ய தோஷம். வியாழன் அல்லது சனிக்கிழமை வெள்ளை மொச்சை சுண்டல் செய்து பச்சை பயிர் சுண்டல் நெய்வேத்தியம் செய்து நான்கு வாரங்கள் தானம் செய்தால் திருமணம் கூடிய விரைவில் கைகூடும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
இண்டஸ்ரி ஆகியவற்றில் நில தோஷம் உள்ளவர்கள் அந்த இடத்தோட மண் எடுத்து இக்கோயிலில் வைத்து வழிபாடு செய்து மறுபடியும் அந்த இடத்திலேயே போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் நில தோஷம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகள் உண்டாகும்.
The post காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் appeared first on Dinakaran.