அதிர்ச்சியடைந்த பெரியகண்ணாள், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, மகனும், மருமகளும் இறந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த, இரு குழந்தைகளும் மறுநாள் இறந்தனர். இது குறித்து, சிறுவலுார் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “பெருந்துறை புதுதொட்டிபாளையத்தைச் சேர்ந்த சேது என்கிற கோபி சங்கர் (25), சிறுவலூர் பதிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி (52), அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவருடைய மனைவி வெண்ணிலா (38), சண்முகம் என்பவருடைய மனைவி சுமதி (40) ஆகியோர் எங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று தந்தனர்.
இதற்காக அதிக தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு எங்களை ஏமாற்றினர். இதனால் நாங்கள் இதர சுய உதவிக்குழுக்களில் பணம் பெற இயலாதபடி செய்து விட்டனர். எனவே தாங்கள் அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். மேலும் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் வசூலித்ததால் நாங்கள் மிகுந்த கடனுக்கு உள்ளானோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள இந்த 4 பேர் தான் காரணம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் நடந்த விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post 4 பேர் விஷம் குடித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை கைது செய்த போலீசார் appeared first on Dinakaran.
