மாநகர பேருந்தில் ஏறிய பயணி மீது தாக்குதல்: நடத்துனரிடம் விசாரணை

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் அடுத்த வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் பிரவீன் அருள் பிரசாத் (31). இவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் செல்வதற்காக பேருந்திற்காக நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 2ஏ மாநகர பேருந்து சென்ட்ரலில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் பேருந்தில் பிரவீன் ஏறியபோது எண்ணூர் பெரியக்குப்பத்தை சேர்ந்த நடத்துனர் மகேஷ் (20) என்பவரிடம் திருவான்மியூருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடத்துனருக்கும் பிரவீனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நடத்துனர் பிரவீனை தாக்கியுள்ளார். இதில் பிரவீனுக்கு கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post மாநகர பேருந்தில் ஏறிய பயணி மீது தாக்குதல்: நடத்துனரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: