தொடர்ந்து நட்சத்திர பிரச்சாரகர்களாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி, கிரிராஜ் சிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில் டெல்லியில் உள்ள பாஜகவின் ஏழு எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர். டெல்லி பாஜக பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, இணைப் பொறுப்பாளர் அல்கா குர்ஜார், கட்சியின் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் நட்சத்திரப் பிரச்சாரகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், முதலமைச்சர்கள் வரிசையில் தேவேந்திர ஃபட்னவீஸ், ஹிமந்தா பிஸ்வா சர்மா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், பஜன் லால் சர்மா, நாயப் சிங் சைனி, மோகன் யாதவ் ஆகியோர் நட்சத்திரப் பிரச்சாரகர்களாக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளனர்.
The post டெல்லி சட்டப்பேரவை தேர்தல்.. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது!! appeared first on Dinakaran.