தமிழ்நாடு முதல்வரின் பசுமை பள்ளி திட்டம் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் பசுமை பள்ளி திட்டத்தில் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த 2022-2024 கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு ரூ.15 கோடி மதிப்பீல் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2024-2025ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வான பள்ளிகளில் சூரிய மின்தகடு, பேட்டரி பராமரிப்புக்காக 2 ஆண்டுக்கு ரூ.6 லட்சம், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.4.5 லட்சம், தோட்டப் பராமரிப்புக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.2.16 லட்சம், மழைநீர் சேகரிப்புக்கு ரூ.1.5 லட்சம், தோட்டம் அமைக்க ரூ.2.5 லட்சம், பசுமை விழிப்புணர்வுக்கு ரூ.2 லட்சம், இதர செலவுகளுக்கு 1.34 லட்சம் பங்கீட்டு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முதல்வரின் பசுமை பள்ளி திட்டம் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: