முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் பொங்கல் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கவிஞர் வைரமுத்து, மறைந்த பேராசிரியர் அன்பழகன் மகன் அ.அன்புச்செல்வன் மற்றும் பேராசிரியரின் பேரனும் எம்எல்ஏவுமான அ.வெற்றியழகன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சு.ப.வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோன்று முகாம் அலுவலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொங்கல் திருநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்களும் முதல்வருக்கு கைலுக்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அங்கு கூடி இருந்த பல இளைஞர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: