அரசு பஸ் மோதி 3 பேர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது, டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி 3 பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள சின்னபனமுட்லு அடுத்த தீர்த்தகிரி கொட்டகை பகுதியை சேர்ந்தவர் நாகன் (42), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சரத்குமார் (32), ஹரீஷ் (21). சரத்குமார் ஆந்திராவில் உள்ள கிரானைட் கம்பெனியிலும், ஹரீஷ் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, மத்தூரில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகன், சரத்குமார், ஹரீஷ் ஆகியோர், மீண்டும் ஒரே டூவீலரில் 3 பேரும் ஊர் திரும்பினர். திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஜெகதேவி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, பின்னால் கடலூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ், இவர்களது டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் நாகன், சரத்குமார், ஹரீஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post அரசு பஸ் மோதி 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: