மேட்டூர் நீர்மட்டம் 114 அடியாக சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் கடந்த 5 நாட்களாக நீர்வரத்து 1200 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 381 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 114.44 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 114.14 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 84.43 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் நீர்மட்டம் 114 அடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: