இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் P.C.கல்யாண், இ.கா.ப., கோயம்பேடு துணை ஆணையாளர் G.சுப்புலட்சுமி, கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் R.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்து, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை கூறி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டி, யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். காவல் குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும், பொங்கல் வாழ்த்துகள் கூறி, காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இந்த விழாவில், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இணை ஆணையாளர், துணை ஆணையாளர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், பெண் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பெண் காவல் ஆளிநர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதே போல நேற்று (13.01.2025) மாலை, இராயபுரம், மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள புனித பீட்டர்ஸ் பள்ளியில் சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம் சார்பில், வடக்கு கூடுதல் ஆணையாளர் K.S.நரேந்திரன் நாயர், இ.கா.ப., தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு கூடுதல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல இணை ஆணையாளர் எம்.மனோகரன், இ.கா.ப., வண்ணாரப்பேட்டை, பூக்கடை மற்றும் புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
The post காவலர் குடும்பத்தினர் நடத்திய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் சென்னை காவல் ஆணையாளர்!.. appeared first on Dinakaran.