திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியை சேர்ந்த வீரர் டேவிட் வில்சன், மாடு குத்தியத்தில்
படுகாயமடைந்தார். காயமடைந்த டேவிட் வில்சன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்
4-வது சுற்று முடிவில் அரியலூரை சேர்ந்த மணி 3 காளைகளை அடக்கி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது :வரை 370 காளைகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் 16 காளைகள் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக கால்நடை மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீத தலைமையில் மாடு பிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அவனியாபுரத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவனியாபுரத்தில் 15 ஆம்புலன்ஸ் வண்டிகளும் சுமார் 26 மருத்துவ குழுக்களும் தயாரான உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிந்துள்ளது.சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு துணை முதல்வர் நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
The post அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முடிஞ்சா என்ன தொடுங்க பார்போம் appeared first on Dinakaran.