ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது!

சென்னை: ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்யப்பட்டார். ரவுடி பாம் சரவணை கைது செய்து சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். எம்.கே.பி. நபர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பி ஓட முயன்ற பாம் சரவணனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகளில் பிரபல ரவுடி பாம் சரவணன் தொடர்புடையவர்.

 

The post ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது! appeared first on Dinakaran.

Related Stories: