பெட்ரோல் பங்க்கில் ரூ.16 லட்சம் திருட்டு: மேனேஜருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலையை சேர்ந்த மரிய ஜோஸ்பின் சரினா (49), அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு, ஓட்டேரி மேட்டுப்பாளையம் ரங்கன் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (32), கடந்த 6 மாங்களுக்கு மேலாக மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் மரிய ஜோஸ்பினுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் 15ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்கிற்கு வரவில்லை. அன்று முதல் வசூல் பணத்தை மேனேஜர் சதீஷ்குமார் கண்காணித்து சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி சதீஷ்குமார், சபரிமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது, வசூல் பணம் பெட்ரோல் பங்க்கில் உள்ள லாக்கரில் உள்ளது. சாவி என்னிடம் உள்ளது. நான் வந்து தருகிறேன், என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் நீண்ட நாட்களாகியும் அவர் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, மரிய ஜோஸ்பின் தன்னிடமிருந்த மற்றொரு சாவியை வைத்து, பெட்ரோல் பங்க்கில் இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் பணம் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மரிய ஜோஸ்பின், கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது, ரூ.16 லட்சத்து 23 ஆயிரத்துடன் சதீஷ்குமார் தலைமறைவானது தெரியவந்தது. புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பெட்ரோல் பங்க்கில் ரூ.16 லட்சம் திருட்டு: மேனேஜருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: