இங்குள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்ளிட்டவற்றிலும் வட மாநில இளைஞர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு விதமான பொருட்களை வீதிகள் ேதாறும் கொண்டு சென்று விற்பனை செய்யும் வட மாநில இளைஞர்களம் அதிகரித்து இருக்கிறார்கள். கடந்த 2020 கொரோனா கால கட்டத்தின் போது, வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது 700 பேர் முதல் 1000 பேர் வரை 3 கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா முடிந்து இவர்கள் 2022 ல் மீண்டும் குமரிக்கு வந்தனர். கொரோனாவுக்கு பின், வழக்கத்தை விட பல மடங்கு வட மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் வரும் ரயில்களில் சாரை, சாரையாக வட மாநிலத்தவர்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளனர். பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வருகிறார்கள். ஹவுராவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நூற்றுக்கணக்கான வட மாநில இளைஞர்கள் வந்திறங்கினர். இவர்களை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வருவதற்காக புரோக்கர்களும் உள்ளனர். இது குறித்து இளைஞர்கள் சிலரிடம் கேட்டபோது கன்னியாகுமரியில் சாலை பணிக்காக அதிகம் பேர் வந்துள்ளனர் என கூறினர். குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் சுமார் 1000 தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தேவையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து கிடைப்பதில்லை. இதனால் தான் வட மாநிலத்தில் இருந்து அதிகம் பேர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கான்ட்ராக்டர் ஒருவர் கூறுகையில், தமிழ்நாடு இளைஞர்கள் சரியாக வேலைக்கு வருவதில்ைல. அவ்வாறு வந்தால் கூட செல்போன் பேசுவது உள்ளிட்ட பிற காரணங்களால் சரியாக பணி செய்வது கிடையாது. ஒரு சிலரை தவிர மற்றவர்கள் தகராறு செய்கிறார்கள். செல்போனில் பதிவு செய்கிறார்கள். இதனால் தற்போது கட்டுமானம் முதல் அனைத்து தொழிலுக்கும் வட மாநிலத்தவர்களை தான் அழைக்கிறோம் என்றனர்.
The post குமரி மாவட்டத்துக்கு வட மாநில இளைஞர்கள் வருகை பல மடங்கு அதிகரிப்பு: ரயில்களில் சாரை சாரையாக வந்திறங்குகிறார்கள் appeared first on Dinakaran.