சென்னை : வரும் அக்டோபர் மாதம் வரை படம் நடிக்கப் போவதில்லை என நடிகர் அஜித்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கார் பந்தயம் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே திரைப்படங்களில் நடிக்க திட்டம் என்றும் திரைப்படங்களில் நடித்ததால் சில கார் பந்தயங்களில் மட்டுமே தன்னால் பங்கேற்க முடிந்தது என்றும் அஜித் குறிப்பிட்டுள்ளார்.