கோவை :கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடத்தில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலுவை வழக்குகளுடன், பின்னணியில் உள்ள சதி குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிறப்பு குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.