இதற்கிடையில் சீமான் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் பற்றிய சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் சீமான் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரட்டுள்ளார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
The post பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.! சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.