விராலிமலை,ஜன.10: விராலிமலை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் வைத்து நீதிபதியுடன் இணைந்து வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்கள் நேற்று கொண்டாடினர். விழாவையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பன்னீர் கரும்புகள், மஞ்சள் விழங்கு, ஆவாரம் பூ, பூலப் பூ தோரணங்கள் கட்டப்பட்டு வளாகம் விழா கோலம் பூண்டிருந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி வர உள்ளதால் பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டுகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் பொங்கலோ.. பொங்கல் என மகிழ்ச்சியுடன் கூக்குரலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதில்,விராலிமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அன்பு தாசன்,விராலிமலை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தங்கப்பா, சந்திர ஜோதி,சேகர், வீரமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post விராலிமலை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.