கரூர், ஜன.10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இரண்டு பேர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அடுத்துள்ள வெங்ககல்பட்டி மேம்பால பகுதியில் போலீசார் சோனையின் போது, தாந்தோணிமலை மற்றும் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க 2 பேர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.