அறந்தாங்கி,ஜன.10: அறந்தாங்கி அருகே நாகுடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 4,91,944 குடும்ப அட்டைதார்களுக்கும் 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு என மொத்தம் 4,92,891 குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றியம் நாகுடி, கூகனூர் பிடாரிக்காடு ஆகிய கிராம பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு செங்ககரும்பு வழங்கும் நிகழ்ச்சியை அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நல்லதம்பி மன்னகுடி சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அறந்தாங்கி அருகே நாகுடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.