நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோர் ஆகலாம்

 

நாகப்பட்டினம்,ஜன.10: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்முனைவு திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ.3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ள புதிரைவண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்முனைவு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து செய்து பயன் பெறலாம். கூடுதல் தகவல் பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோர் ஆகலாம் appeared first on Dinakaran.

Related Stories: