கரூர், ஜன.10: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகள் மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றமாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளுவரின் 133 உயர அடி சிலை 2000ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முன்னாள் முதல்வர் கலைஞரால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு உத்தரவுக்கு இணங்க, பொது நு£லகத்துறை கருர் மாவட்டம் சார்பில், கரூர் மாவட்ட அளவிலான திருககுறன் தொடர்பான பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
மேலும், கல்லூரி மாணவர்களிடையே தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தமிழ் மரபுக்ள ஆகியவற்றை காப்பதற்காகவும், இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகவும், தமிழகம் முழுதும் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது. காவிரி மண்டலத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியுடன் இணைந்து இளைஞர் இலக்கிய விழாவில் பல்வேறு தலைப்புகளில் 10 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நூலக வாசகர்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் லேகா தமிழ்ச் செல்வன், கோட்டாட்சியர் முகமது பைசல், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post பொங்கல் பரிசு தந்த உற்சாகம் இலக்கியத் திருவிழா போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.