அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: பைடன் சொல்கிறார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பைடனும் முதலில் களத்தில் இருந்தனர். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணத்தால் அவர் போட்டியில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் அதிபர் பைடன் அளித்த பேட்டியில், ‘அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன் என நம்புகிறேன். அதற்கான சிறந்த வாய்ப்பு என்னிடம் இருந்ததாக நினைக்கிறேன். ஆனால், 86 வயதாகும் நிலையில், மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என நான் விரும்பவில்லை. நான், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது’ என்றார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: பைடன் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: