குமாரபுரம், ஜன.10: ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் எட்வின். தேவசகாயம் மவுண்ட் ஆலயத்துக்கு பேனர் வைப்பதற்காக நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தனது காரில் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டார். தக்கலை அருகே மணலி பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரம் வளைவான பகுதிகளை அம்புக்குறியிட்டு காட்டும் சிறிய இரும்பு போஸ்ட் மீது கார் மோதியது. இதில் அந்த கார் பலமுறை பல்டியடித்து நின்றது. ஆனால் காரில் இருந்த ஏர் பேக் திறந்ததால் எட்வின் காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் அந்த கார் கடுமையாக சேதமடைந்தது. காயமடைந்த எட்வின் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
The post தக்கலை அருகே தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார் டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.