புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 717 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபாட்டில்களை கடத்தி வந்த சந்தன ராஜ்(41) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.