டங்ஸ்டன் வராது: அமைச்சர் உறுதி

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக ஒரு பிடி மண் கூட அள்ள தமிழக அரசு அனுமதி தராது என்று அமைச்சர் பி.மூர்த்தி கிராமத்தினரிடம் கூறியுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நேற்று மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிபட்டி, கோட்டை வாசல், தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களிடம் விளக்கினார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘டங்ஸ்டன் திட்டம் குறித்து பொதுமக்கள் துளி அளவும் அச்சப்படத் தேவையில்லை. அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்காக ஒரு பிடி மண்ணை கூட அள்ள அனுமதி தராது’ என்று கூறினார். அப்போது, பொதுமக்கள் டங்ஸ்டன் திட்டம் குறித்து கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.

The post டங்ஸ்டன் வராது: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: