நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கோ.விசுவநாதன் பேசுகையில், “வி.ஐ.டி நிறுவனம் தரமான கல்வியை வழங்குவதில் சிறந்த முன்மாதிரி நிறுவனமாக திகழ வேண்டுமென வலியுறுத்தினார்”. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலூர் மற்றும் சென்னையில் உள்ள விஐடி வளாகங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் சிறந்து விளங்கும் இரண்டு கூட்டு ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்படும்.
விஐடியில் பயிலும் பட்டதாரிகள் தரவு அறிவியல் பிரிவில் 2 ஆண்டுகள் விஐடியிலும், 2 ஆண்டுகள் ஆர்ஐடியிலும் பயில வாய்ப்புகள் ஏற்படும். இதேபோல், விஐடியில் ஓர் ஆண்டும் ஆர்ஐடியில் ஓர் ஆண்டும் மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இரு நிறுவனங்களின் கூட்டு மாணவர் திட்டங்கள் மாணவர்களுக்கு கல்வி ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும்.
இந்த நிகழ்வில் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், விஐடியின் துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், சென்னை விஐடியின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், சென்னை விஐடியின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், விஐடியின் சர்வதேச உறவுத்துறையின் இயக்குநர் ஆர்.சீனிவாசன், சென்னை விஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மாநாட்டில் சென்னை விஐடி – அமெரிக்கா ஆர்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.