இந்நிலையில், இன்று காலை தபெதிக-வினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் முன்பு பேரிகார்டுகள் அமைத்து தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமானுக்கு எதிராக தபெதிகவினர் முழக்கம் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவிக-வினர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பெரியார் பேசாததை பேசியதாக கூறுகிறார் சீமான். பொய்யான செய்திகளை தீய எண்ணத்துடன் சீமான் பரப்புகிறார் என்றும், பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சீமான் பேசி வருகிறார் என்றும் கூறி, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நவவடிக்கை எடுக்க வேண்டும் என திவிக-வினர் வலியுறுத்தியுள்ளனர்.
The post பெரியார் பற்றி அவதூறு: நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திவிக-வினர் போலீசில் புகார்!! appeared first on Dinakaran.