சாத்தான்குளம், ஜன. 9: சாத்தான்குளம் யூனியன் கொம்பன்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட 1வது வார்டு துவர்க்குளம் கிராமத்தில் 2025 பனை விதைகள் நடுவதற்கு திட்டமிட்டு துவர்க்குளம் ஊரிலுள்ள குளத்தின் உட்பகுதியில் சுமார் 750 பனை விதைகள் நடப்பட்டது. பஞ். முன்னாள் துணை தலைவர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் ஆதிப்பாண்டி, சமூக ஆர்வலர் துவர்க்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகலிங்கம், வரிப்பிலான் குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரின்ஸ், மேட்டுகுடியிருப்பு வழக்கறிஞர் வசந்தகுமார், விவசாயிகள் வாசகன், சுரேஷ் கார்த்திக், முருகதுரை, மகேஸ்வரன், எஸ்தாக் மற்றும் கொம்பன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சாத்தான்குளம் ஆர்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடுங்குளம் பள்ளி, துவர்க்குளம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
The post துவர்க்குளத்தில் பனை விதை விதைப்பு appeared first on Dinakaran.