மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்

கோவை, ஜன. 9: கோவை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்புதல் தேர்வானது துவங்கி நடந்து வருகிறது. இதில், வார விடுமுறையான வரும் சனிக்கிழமை (11-ம் தேதி) கணினி அறிவியல், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடங்களுக்கான தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வு தேதியை பள்ளி வேலை நாளில் மாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது சனிக்கிழமை (11-ம் தேதி) நடக்க இருந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் பள்ளி வேலை நாளான 13-ம் தேதி (திங்கட்கிழமை) நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலருக்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

The post மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: