விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் அசத்தல்

மதுரை, ஜன. 9: பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டிகளில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முதல் மூன்று நாட்கள் மாணவிகளுக்கும், அதனைதொடர்ந்து மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதன்படி கபடி, டென்னிஸ் போட்டிகளில் மாவட்ட வாரியாக மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் கபடியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவேகம் பள்ளி அணி வெற்றி பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2ம் இடம் பிடித்தது. இரட்டையர் டென்னிஸ் பிரிவில், சென்னை நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. ஈரோடு பாரதி வித்யாபவன் பள்ளி 2ம் இடம் பிடித்தது. ஒற்றையர் மகளிர் டென்னிஸ் போட்டியில், சென்னை நுங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு பழனியம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி பிடித்தது.

The post விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: