விவசாயிகள் உரச்செலவை குறைக்க பயிர்க் கழிவு மேலாண்மை தொழில்நுட்பம்l வேளாண்துறை தகவல்

மதுரை, ஜன. 9: பயிர்க் கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து, வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு. பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள பயிர்க்கழிவை தொடர்ந்து எரிப்பதால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறையும். மேலும் 0 முதல் 15 செ.மீ வரை மண் இழப்பு ஏற்படும். வளமான மேற்பரப்பு மண்ணில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து, கரிமச்சத்து ஆகியவற்றை இழக்க நேரிடும். மண்ணின் வெப்பநிலை கூடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழியவும் வாய்ப்புள்ளது. மண்ணின் கார்பன்- நைட்ரஜன் சமநிலை குலையும்.

ஒரு டன் நெல் கழிவை எரிப்பதனால் 5.5 கிலோ தழை, 2.3 கிலோ மணி, 2.5 கி.கி சாம்பல், 1.2 கி.கி சல்பர் மற்றும் அங்கக கரிம இழப்பு ஏற்படுகிறது பயிர்க்கழிவை எரிக்கும் போது பசுமைக்குடில் வாயுக்களான – மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை வெளியேறும். உதாரணமாக நெற்கழிவை எரிக்கும் பொழுது சிஓ 2 -70 சதவீதம், சிஓ-7 சதவீதம், மற்றும் என்2ஓ- 2.09 சதவீதம் வெளியேறுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

பயிர் கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள்: பயிர் கழிவுகளை மண்ணிலேயே மடக்கி உழ வேண்டும். இவ்வாறு மடக்கி உழுவதனால் மண்ணின் தழை, மணி, சாம்பல் சத்து மண்ணின் இயற்பியல் பண்புகள் மேம்படும். பயிர்க்கழிவினைக் கொண்டு நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைக்கலாம். மூடாக்கு என்பது மண்ணில் சூரிய ஒளி நேரடியாகப்படுவதை தவிர்த்திடும். மேலும் தாவரங்களின் கழிவுகளாகவோ, எளிதில் மட்கக்கூடிய செயற்கை பொருட்களாகவோ இருக்கலாம். தாவரக் கழிவுகள் என்பது ஓர் குறிப்பிட்ட காலம் போர்வையாகவும், பிறகு மட்கிய உரமாகவும் பயன்படும். கரும்பு தோகை மட்கும் உரம் தயாரித்தல்: பயிர்க்கழிவில் இருந்து மட்கிய உரம் தயாரிப்பதற்கு அதனை சிறு துண்டுகளாக்க வேண்டும். இதற்கு சந்தையில் பல பயிர் துண்டாக்கும் சாதனங்கள் உள்ளன/ உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால். மண்ணின் அங்ககத் தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை எளிதில் மட்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜீல்லஸ், பெனிசீலியம், டிரைக் கோடெர்மா ஆகிய பூஞ்சாணங்களை பயன்படுத்தலாம்.

The post விவசாயிகள் உரச்செலவை குறைக்க பயிர்க் கழிவு மேலாண்மை தொழில்நுட்பம்l வேளாண்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: