தர்மபுரி, ஜன.9: அரூர் பஸ் நிலையம் அருகே, டிரைவரிடம் செல்ேபான் பறித்த வாலிபரை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், நன்நாட்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் யுவராஜ், லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து சேலத்திற்கு, காய்கறி லோடுடன் லாரியை ஓட்டி சென்றார். இந்நிலையில், ஷிப்ட் முறைப்படி லாரியை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதற்காக, அரூர் பஸ் நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு அந்த நபருக்கு காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர், திடீரென யுவராஜின் சட்டை பையில் இருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர்களை துரத்தி சென்றார். அப்போது, ஒருவர் அவர்களின் பிடியில் சிக்கினார். இதையடுத்து அந்த நபரை அரூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அரூர் அம்பேத்கர் நகர் புதுகாலனியை சேர்ந்த வெள்ளையன் மகன் தமிழரசன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜூகுட்டி என்பவரை தேடி வருகின்றனர்.
The post டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.