சிறைகளில் கூட்ட நெரிசலை குறைக்க விசாரணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: சிறைகளில் கூட்ட நெரிசலை குறைக்க விசாரணை கைதிகளைஉடனே விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பாரதீய நாகரீக சுரசா சன்ஹிதா சட்டப்பிரிவு 479ன் கீழ் விசாரணை கைதிகளை விடுவிக்க அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தின் பாதி வரை சிறையில் வைக்கப்பட்டு இருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம். முதல் முறை குற்றவாளிகளாக இருந்தால், அந்தக் குற்றத்திற்காக அதிகபட்சமாக மூன்றில் ஒரு பங்கு சிறைத்தண்டனைக் காலம் வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தால், விடுவிக்கலாம். இதற்காக பிரிவு 479 (3 ) விசாரணைக் கைதிகளை விடுவிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறைக் கண்காணிப்பாளருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post சிறைகளில் கூட்ட நெரிசலை குறைக்க விசாரணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: