திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மூனாண்டிபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. எந்திரங்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் ஆலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.