மாதவரம்: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர், தாய் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கலைவாணன் (29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 6 மாதத்தில் சைலன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு பவானி தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். மதியம் 12 மணிக்கு கலைவாணன் வேலைக்குச் சென்றபோது குழந்தை அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த பவானி, குழந்தையை வந்து பார்த்தபோது சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதனால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய 6 மாத குழந்தை மர்ம மரணம் appeared first on Dinakaran.