இதற்காக பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கேட்காத போதும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமரின் எதிர்பாராத இந்த கருணை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. அரசு மரியாதையை நாம் கேட்கக்கூடாது, அதை அரசே வழங்க வேண்டும் என்று தந்தை அடிக்கடி கூறுவார். அவரது நினைவை போற்றும் வகையில், பிரதமர் மோடி செய்துள்ள மரியாதைக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். எனது அப்பா தற்போது இருக்கும் இடத்தில் கைத்தட்டலோ அல்லது விமர்சனமோ அவரை பாதிக்காது. அதே சமயம், அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.
The post முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரணாப் முகர்ஜியின் மகள் பிரதமர் மோடிக்கு நன்றி appeared first on Dinakaran.