புழல் ஏரியின் மொத்த உயரமான 36.61 அடியில் தற்போது நீர்மட்டம் 36.04 அடியை எட்டியது.

சென்னை: புழல் ஏரியின் மொத்த உயரமான 36.61 அடியில் தற்போது நீர்மட்டம் 36.04 அடியை எட்டியது. சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே நீர் பிடிப்பு பகுதிகளில் புழல் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் 85 கனஅடியாக இருந்த நிலையில், சோழவரம் ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 285 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக புழல் ஏரி நிரம்பவுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 91சதவீதம் நிரம்பியுள்ளது. ஒட்டுமொத்தமான 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு என்பது 3,010 மில்லியன் கனஅடியாக உள்ளது. தொடர்ச்சியாக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 89% நீர் இருப்பு இருப்பதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post புழல் ஏரியின் மொத்த உயரமான 36.61 அடியில் தற்போது நீர்மட்டம் 36.04 அடியை எட்டியது. appeared first on Dinakaran.

Related Stories: