விகேபுரம் பள்ளியில் தேசிய பறவைகள் தினம்

விகேபுரம்,ஜன.7: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பாபநாசம் வனச்சரகம் சார்பில் தேசிய பறவைகள் தினம் விகேபுரம் அருகே செட்டிமேட்டில் உள்ள ரீச் மெட்ரிக் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் தலைமை வகித்தார். வனவர் செல்வ சிவா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தாமஸ் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பறவைகளை பாதுகாப்பது நமது எதிர்காலத்தை பாதுகாப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post விகேபுரம் பள்ளியில் தேசிய பறவைகள் தினம் appeared first on Dinakaran.

Related Stories: