ராயக்கோட்டையில் பீன்ஸ் விளைச்சல் அமோகம்

ராயக்கோட்டை, ஜன.7: ராயக்கோட்டையில், பீன்ஸ் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை சரிந்து வருகிறது. ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள தொட்ட திம்மனஅள்ளி, தின்னூர், ஏரி சின்ன கானம்பட்டி, குளிக்காடு, சின்னதப்பை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் திருப்தியாக இருப்பதாலும், நிலப்பகுதி எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படுவதாலும் ஆண்டு முழுவதும் பீன்ஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தை நன்கு உழுது, சொட்டு நீர் குழாய் பதித்து, விதைகள் நட்ட 60 நாட்களில் கொடியாக வளர்ந்து காய்களை விடுவதாகவும், கொடிகள் வளர குச்சிகள் நட்டு பந்தல் அமைத்தாலே போதும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ ₹120 வரை விற்பனையானது. தற்போது, மகசூல் நன்றாக உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பீன்ஸ் விலை சரிந்துள்ளது. கிலோ ₹60 முதல் ₹70 வரையிலும் விற்பதாகவும், தொடர்ந்து 3 மாதம் வரையிலும் மகசூல் கிடைக்கும்பட்சத்தில், போட்ட முதலை எடுத்து விடலாம் எனவும் விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

The post ராயக்கோட்டையில் பீன்ஸ் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: