குழித்துறை மகாதேவர் கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

சுசீந்திரம், ஜன. 7 : கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட குழித்துறை மகாதேவர் கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை நிதி ₹9.50 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ேகாயில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ஜோதிஷ்குமார் முன்னிலை வகித்தனர். மராமத்து பொறியாளர் ஐயப்பன், கண்காணிப்பாளர் சிவக்குமார், ஊழியர் மினி, ஒப்பந்தக்காரர் ராஜா, பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குழித்துறை மகாதேவர் கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: