நாகர்கோவில், ஜன.5: நாகர்கோவில் வக்கீல்கள் சங்கம் சார்பில், மாநில அளவிலான வக்கீல்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை தொடங்கியது. வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சங்க செயலாளர் விஸ்வராஜன் வரவேற்றார். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் வக்கீல் சங்க நிர்வாகிகள் சர்ச்சில், ஆர்.சுரேஷ், வினோத், என்.எஸ். அருண், அருண் ராஜா, புரூஸ் மில்டன், ஜெபினோ, எம்.மகேஷ், ஆர்.எஸ். வினு, வி. வினோபால் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வக்கீல்கள் அணியினர் பங்கேற்றுள்ளனர். பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ஷேசஷாயி, விக்டோரியா கவுரி, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று காலை இறுதி போட்டிகள் நடக்கின்றன.
The post நாகர்கோவிலில் வக்கீல்களுக்கான கைப்பந்து போட்டி ஐகோர்ட் நீதிபதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.