செய்யாறு, ஜன.4: செய்யாறு- ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி இரவு கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ₹72 ஆயிரம் மற்றும் 80 கிலோ செம்பு பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், டிஎஸ்பி சன்முகவேலனின் தனிப்படை போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் வீரபாண்டியன், தலைமை காவலர்கள் நவீன்குமார், ஷாஜகான், முதுநிலை காவலர்கள் ராஜேஷ் மற்றும் சூரியகுமார் அடங்கிய குழுவினர் கடையில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை கொண்டு, சாலையில் மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட வேலூர் கோட்டை பின்புறம் சம்பத் நகரை சேர்ந்த இந்து(30) மற்றும் இளவரசி (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள வேலூரை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் வாகன ஓட்டி ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.
The post கொள்ளையில் 2 பெண்கள் அதிரடி கைது மேலும் 3 பேருக்கு வலை பழைய இரும்பு கடையில் நடந்த appeared first on Dinakaran.