காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் கலசப்பாக்கம் அருகே

கலசப்பாக்கம், டிச. 31: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் சீட்டம்பட்டு சின்னக் கல்லந்தல் மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து உதவி வன பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் நேற்று முன்தினம் 10 இடங்களில் காப்புக்காட்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஓரிடத்தில் சிறுத்தை நடமாடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் 10, பேர் கொண்ட வன குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நேற்று ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி வன பாதுகாப்பு அலுவலர் வினோத்குமார் கூறுகையில் சிறுத்தை நடமாட்டத்தால் காப்பு காட்டு பகுதியை யொட்டி யுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆடு மாடுகளை மேய்க்க காட்டுக்கு ஓட்டி செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். காப்பு காட்டு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் காப்பு காட்டு பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

The post காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் கலசப்பாக்கம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: