சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நடைபெற்றது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் துறை சார்பில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டியது குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் வரும் நிதியாண்டில் புதிதாக செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், இணை செயலாளர் ரவிச்சந்திரன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், தமிழ்நாடு ஆவணக்காப்பக அரசு முதன்மைச் செயலர் ஸ்வர்ணா, மற்றும் உயர்கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
The post அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர்க்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.