சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, செங்கல்பட்டு போக்சோ நிதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (38). இவரது நண்பரின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். வழக்கமாக ஐந்தாம் வகுப்பு படிக்கு சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மக்கள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரைக்கு அழைத்து சென்று ராயப்பன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது மீறி சொன்னால் கொலை செய்து விட்டுவேன் என ராயப்பன் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நடந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றொரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் ராயப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு, குற்றவாளியான ராயப்பனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1.50 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி ராயப்பனை போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: