பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு; எஸ்.வி.சேகருக்கான ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு; எஸ்.வி.சேகருக்கான ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: